சுடச்சுட

    

    நேருவின் அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி அஞ்சலி

    By DIN  |   Published on : 27th May 2019 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

     

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி காலமானார்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினமான இன்று அவருக்கு நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம். இந்நாட்டுக்கு அவருடைய அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கில் அஞ்சலியை பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai