சுடச்சுட

  
  uttarpradesh

  மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தை உருவாக்குவதற்காக கிடைத்தது என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். 
  இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: 
  சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் சந்தர்ப்பவாத கூட்டணி ஜாதி அரசியல் மீது நம்பிக்கை வைத்தது. ஆனால் நான், ஜாதி, இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து மக்களின் வளர்ச்சியை நோக்கி உழைத்தேன். அதனால் தான் மக்கள் பாஜகவுக்கு மீண்டும் ஆதரவளித்தனர். இத்தகைய வெற்றிக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரே காரணம். 
  உத்தரப் பிரதேசத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி, புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தை உருவாக்குவதற்காக மக்கள் அளித்த தீர்ப்பாகும். இது, அதிகார துஷ்பிரயோகம், ஜாதி, ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான தீர்ப்பாகும். இதன்மூலம், சமூக நலன் என்ற பெயரில் ஏழைகளை ஏமாற்றிய போலியான கட்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 
  இந்த வெற்றி, நமது தாய்மார்கள், சகோதரிகளை துன்புறுத்திய, தொழிலதிபர்கள், வர்த்தகர்களிடம் அடாவடியாக பணம் வசூலித்த சமாஜவாதி குண்டர்களுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். உத்தரப் பிரதேசத்தில் முன்பு சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருந்தது. 
  அரசியல்வாதிகள், ஊழல் செய்யும் காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகள் இடையேயான கூட்டுச் சதி காரணமாக, மாநிலத்தில் குற்றம் செய்வது ஒரு தொழிலாகவே மாறிவிட்டிருந்தது. ஆனால் தற்போதைய அரசு குற்றவாளிகளை சகித்துக்கொள்ளாத கொள்கை கொண்டுள்ளதால் அவர்கள் ஓடி ஒளிகின்றனர். 
  உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக, கடந்த 2 ஆண்டுகளில் குற்றவாளிகளின் ஜாதி, மத, அரசியல் பின்புலங்கள் குறித்து சற்றும் யோசிக்காமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மோசமான பணி கலாசாரம், நடத்தைகள் காரணமாக மக்களிடையே நம்பிக்கை இழந்திருந்த காவல்துறை, தற்போது நல்ல முறையிலான மாற்றங்களை சந்தித்து வருகிறது. 
  அர்ப்பணிப்புடன் பணியாற்றியதன் காரணமாக, உத்தரப் பிரதேசத்தின் சட்டம்-ஒழுங்கானது, தற்போது இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai