உ.பி.யில் 10 மக்களவை தொகுதிகளை பாஜக வெல்ல உதவியதே காங்கிரஸ்தான்!? சரியாத்தான் சொல்றோமா?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இதற்கு அக்கட்சியின் பிரசாரம் காரணம் அல்ல என்றும், 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற காங்கிரஸே காரணமாக இருந்தது என்றும் கூறுகிறது புள்ளி விவரங்கள்.
உ.பி.யில் 10 மக்களவை தொகுதிகளை பாஜக வெல்ல உதவியதே காங்கிரஸ்தான்!? சரியாத்தான் சொல்றோமா?


லக்னௌ:  உத்தரப்பிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இதற்கு அக்கட்சியின் பிரசாரம் காரணம் அல்ல என்றும், 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற காங்கிரஸே காரணமாக இருந்தது என்றும் கூறுகிறது புள்ளி விவரங்கள்.

அதாவது, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இடம்பெற்ற மகாக் கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி இணைந்திருந்தால் உத்தரப்பிரதேசத்தின் 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருக்க முடியாது என்று தெரிகிறது.

அதாவது மகா கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள் 38.62%. காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு 6.3% இதை கூட்டினால் மொத்தம் 44.92% வாக்குகள். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 49.56%.  ஆனால், உத்தரப்பிரதேசத்தில் படௌன், பண்டா, பஸ்தி, மீரட், சுல்தான்புர், பிரோஸாபாத் உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மகாக் கூட்டணி பெற்ற வாக்கு சதவீதத்தை விட பாஜக குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றுள்ளது. ஒரு வேளை மகாக் கூட்டணியுடன் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டிருந்தால் இந்த 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அல்லது மகாக் கூட்டணியே வெற்றி பெற்றிருக்கும்.

இந்த 10 தொகுதிகளிலும் மகாக் கூட்டணி - காங்கிரஸ் இணையாததால் வாக்குகள் சிதறச் செய்த காரணத்தால் அது பாஜகவுக்கு பலமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com