சுடச்சுட

  

  24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது: சிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலோ பதவியேற்பு

  By PTI  |   Published on : 27th May 2019 03:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kolay

   

  சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் பிஎஸ் கோலே மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

  பல்ஜோர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியற்பு விழாவில் சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத பிஎஸ் கோகலேவை, அக்கட்சியின் எம்எல்ஏக்கள், கட்சியின் சட்டப்பேரவை குழுத்தலைவராக தேர்வு செய்ததை அடுத்து, இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 51வயதாகும் கோலே நேபாள மொழியில்  முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

  சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களைக் கைப்பற்றி எஸ்.கே.எம். கட்சி வெற்றி பெற்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், அந்த மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக நீடித்து வந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

  முன்னதாக, தலைநகர் காங்டாக்கில் எஸ்.கே.எம். கட்சியின் தலைவர் பி.எஸ்.கோலே தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், ஆளுநர் கங்கா பிரசாதை அவரது மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினர். 

  பி.எஸ்.கோலே, ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர். மேலும், கடந்த 2017-இல் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்ககம் செய்யப்பட்டவர். எனவே, அவருக்கு முதல்வர் பதவியை வழங்குவதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து, சட்ட நிபுணர்களிடம் ஆளுநர் ஆலோசனை  நடத்திய பிறகே, அவரை ஆட்சியமைக்க அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai