ஜேடி(யு)வில் இணைந்த குஷ்வாஹா கட்சி எம்எல்ஏக்கள்

பிகார் மாநிலத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் எம்எல்ஏக்கள் இருவரும், எம்எல்சி ஒருவரும் ஐக்கிய ஜனதா தளத்தில் (ஜேடி(யு)) ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர். 
ஜேடி(யு)வில் இணைந்த குஷ்வாஹா கட்சி எம்எல்ஏக்கள்

பிகார் மாநிலத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் எம்எல்ஏக்கள் இருவரும், எம்எல்சி ஒருவரும் ஐக்கிய ஜனதா தளத்தில் (ஜேடி(யு)) ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர். 
மக்களவைத் தேர்தலில் குஷ்வாஹாவின் கட்சி தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்களான லாலன் பாஸ்வான், சுதான்ஷு சேகர் மற்றும் எம்எல்சி சஞ்சீவ் சிங் ஷியாம் ஆகியோர் கட்சியிலிருந்து விலகியது ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது. குஷ்வாஹா கட்சியில் இவர்கள் தவிர வேறு பேரவை உறுப்பினர்களோ, மேலவை உறுப்பினர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
இதுதொடர்பாக பிகார் சட்டப்பேரவைத் தலைவர் விஜய் குமார் செளதரி, சட்டமேலவை துணைத் தலைவர் ஹாரூன் ரஷீத் ஆகியோர் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "எம்எல்ஏக்களான லாலன் பாஸ்வான், சுதான்ஷு சேகர் மற்றும் எம்எல்சி சஞ்சீவ் சிங் ஆகியோர் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியிலிருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை வெள்ளிக்கிழமை வழங்கினர். மேலும், ஐக்கிய ஜனதா தளத்தில் தங்களை இணைத்துக் கொண்டதற்கான கடிதத்தையும் அவர்கள் அக்கட்சியிருந்து பெற்றுள்ளனர். அலுவல்பூர்வ நடைமுறைகளுக்காக நேரில் வருமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இனி அவர்கள் மூவரும் ஐக்கிய ஜனதா தள கட்சியினராக நடத்தப்படுவர்' என்றனர். 
முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகா கூட்டணியில் இணையும் குஷ்வாஹாவின் முடிவுக்கு எம்எல்ஏக்களான லாலன் பாஸ்வான், சுதான்ஷு சேகர் மற்றும் எம்எல்சி சஞ்சீவ் சிங் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 
அப்போது, ஆளும் கூட்டணியிலேயே தாங்கள் தொடரப்போவதாகத் தெரிவித்த அவர்கள், தங்களையே உண்மையான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியாக அங்கீகரிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினர். 
இந்நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39-ஐ கைப்பற்றியது. மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், 17 தொகுதிகளில் போட்டியிட்டு, 16-இல் வெற்றி பெற்றது. இதையடுத்து, தனி குழுவாக அங்கீகாரம் கோருவதைக் காட்டிலும், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைவது பாதுகாப்பானது என முடிவு செய்து லாலன் பாஸ்வான், சுதான்ஷு சேகர் மற்றும் சஞ்சீவ் சிங் ஆகியோர் தற்போது அக்கட்சியில் இணைந்துள்ளனர். 
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com