சுடச்சுட

  

  ஆன்லைனில் சுய விளம்பரம்: 50  மருத்துவர்களுக்கு நோட்டீஸ்

  By DIN  |   Published on : 28th May 2019 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுய லாபத்துக்காக ஆன்லைன் மூலமாக விளம்பரம் தேடிக் கொள்ளும் மருத்துவர்கள் 50 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமிழக மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
  அண்மைக் காலமாக, சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்கள் குறித்த விளம்பரங்கள் அதிக அளவில் வருகின்றன. பயன்பாட்டாளர்கள் அவற்றை விரும்பாத போதிலும், அனைத்து வலைதளப் பக்கங்களிலும் அதுபோன்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
  மக்களை ஏமாற்றும் நோக்கில் பொய்யான சில மருத்துவ உத்தரவாதங்கள் அதில் இடம்பெறுகின்றன. 
  இந்த நிலையில், அவற்றை முறைப்படுத்தும் வகையில் சில அறிவுறுத்தல்களை அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும், மருத்துவ அமைப்புகளுக்கும் தமிழக மருத்துவ கவுன்சில் அண்மையில் வெளியிட்டது.
  ஆன்லைனில் சுய விளம்பரத்தை மருத்துவர்கள் தேடிக்கொள்வது விதிகளுக்குப் புறம்பானது என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  இந்த நிலையில், அவ்வாறு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட 50 மருத்துவர்களுக்கு தமிழக மருத்துவக் கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கவுன்சில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai