சுடச்சுட

  
  rahul_resign

   

  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.  இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் அறிவித்தார். ஆனால்,  அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்து விட்டது.

  எனினும், தனது ராஜிநாமா முடிவில் ராகுல் பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தான் வேறு எங்கேயும் சென்றுவிடப்போவதில்லை, தொடர்ந்து கட்சிக்காகப் பாடுபட இருப்பதாகவும் ராகுல் கூறியுள்ளார். 

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா வதேரா பெயரை பரிசீலிக்க வேண்டாம், எனது குடும்பத்தில் இருந்து ஒருவர் அந்தப் பதவிக்கு வரவேண்டிய தேவையில்லை என்று ராகுல் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

  அதுமட்டுமன்றி, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.க்களையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார். மேலும், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கட்சித் தலைவர்களுடனான சந்திப்புகள், கட்சி அலுவல்கள் அனைத்தையும் அவர் ரத்து செய்துவிட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்த தகவல்களை காங்கிரஸ் மறுத்து விட்டது.

  இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் அவரது இல்லத்தில்சகோதரி பிரியங்கா வதேரா, செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் செவ்வாய்கிழமை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai