சுடச்சுட

  
  ranchi_ied_blast

   

  ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கோப்ரா படையினர் மற்றும் மாநில போலீஸார் பலத்த காயமடைந்தனர்.

  அம்மாநிலத்தின் சரைகேலா பகுதியில் உள்ள குசாய் எனுமிடத்தில் அதிகாலை 4:53 மணியளவில் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.

  இதில் 209 கோப்ரா குழுவைச் சேர்ந்த 8 வீரர்களும், ஜார்க்கண்ட் மாநில போலீஸார் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கைக்கு செல்லும்போது இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai