சுடச்சுட

  

  நோயாளிகளின் ஜாதகத்தைக் கணித்து சிகிச்சை அளிக்கும் ஜெய்பூர் மருத்துவமனை

  By ANI  |   Published on : 28th May 2019 04:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hospital_jo


  ஜெய்பூர்: மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் பல்ஸை பரிசோதிக்கிறார்களோ இல்லையோ பர்ஸை பதம் பார்த்து விடுகிறார்கள் தனியார் மருத்துவமனைகள்.

  பல் சொத்தையைப் பிடுங்கப் போய் குடும்ப சொத்தையே பிடுங்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் பல் மருத்துவர்கள் மீது வைக்கப்படுகிறது.

  இதெல்லாம் ஏற்புடைய குற்றச்சாட்டுகள் அல்ல என்றாலும், சமுதாயத்தில் இந்த குற்றச்சாட்டுகள் இருக்கத்தான் செய்கிறது.

  இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

  அதாவது யுனிக் சங்கீதா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, கிரக நிலைப்படி அவர்களது நோயின் தீவிரத்தை அறிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.

  அதாவது ஒரு நாளைக்கு 25 முதல் 30 நோயாளிகளுக்கு ஜாதகம் பார்க்கப்படுகிறது.  நோயைக் கண்டறியவே ஜாதகம் பார்க்கிறோம். நோயின் தீவிரத்தை அறிந்த பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கிறோம். இதன் மூலம் நோயை அறிய எடுத்துக் கொள்ளும் காலம் குறைகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai