சுடச்சுட

  

  அல்வார் பாலியல் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் பதவி

  By DIN  |   Published on : 28th May 2019 09:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Police_


  ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

  ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தலித் பெண் ஒருவர், தனது கணவரின் கண் முன்னே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இந்த சம்பவம் குறித்து அவர்கள் தொடக்கத்தில் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கவில்லை. ஆனால், பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அதன்பிறகு பணம் கேட்டு மிரட்டியுள்ளது. இதைத்தொடர்ந்தே, அந்த தம்பதியினர் ஏப்ரல் 30-ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தனர்.  

  இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரத்தை ஆளும் கட்சி மூடி மறைக்க முயற்சிப்பதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. 

  இந்நிலையில், இந்த பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜீவா ஸ்வரூப் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 

  "பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் கான்ஸ்டபிளாக நியமித்ததற்கான பணி நியமன ஆணை அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பணி நியமன ஆணையை அவர் விரைவில் பெறுவார்" என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai