ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

நிலத்திலிருந்து, வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ஆகாஷ்-எம்கே-1எஸ் ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி


நிலத்திலிருந்து, வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ஆகாஷ்-எம்கே-1எஸ் ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒடிஸா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், ஆகாஷ்-எம்கே-1எஸ் ரக ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. கடந்த 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  அப்போது, வானில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, ஆகாஷ் ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த ரக ஏவுகணைகள், வானில் 25 கி.மீ. வரையிலான தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் கொண்டவை. மேலும், 60 கிலோ வரையிலான வெடிபொருள்களை சுமந்து செல்லக்கூடியவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com