காஷ்மீரில் கல்வி நிலையங்கள் தொடர்ந்து மூடல்

ஜம்மு-காஷ்மீரில் அல்காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகீர் முசா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர். 
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர். 


ஜம்மு-காஷ்மீரில் அல்காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகீர் முசா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வரை நீடித்த இந்த சண்டையில், அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகீர் முசா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அமைப்பு, அல்காய்தா அமைப்புடன் தொடர்புடையதாகும்.
ஜாகீர் முசா கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, கல்வி நிலையங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீநகரிலும், புல்வாமா, பட்காம், குப்வாரா ஆகிய மாவட்டங்களிலும் அனைத்து மேனிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திங்கள்கிழமையும் மூடப்பட்டிருந்தன. பாரமுல்லா, கந்தர்பால், பந்திபோரா, அனந்த்நாக் ஆகிய மாவட்டங்களிலும் பெரும்பாலான கல்வி நிலையங்கள் செயல்படவில்லை. அவந்திபோராவில் உள்ள இஸ்லாமிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com