சுடச்சுட

  
  vadivel

  பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் நேசமணி. இவர் அந்த படத்தில் காண்டிராக்டராக நடித்திருப்பதால் பிரபலமாக 'காண்டிராக்டர் நேசமணி' என்று அழைக்கப்படுவார்.

  வடிவேலு தற்போது தமிழ்த் திரைப்படங்களில் தலை காட்டாத போதிலும், சமூக வலைதளங்களில் இன்னும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அரசியல், விளையாட்டு, சினிமா என எந்தவிதமான மீம்ஸ் டெம்பிளேட்கள் என்றாலும் அதில் வடிவேலுவின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. 

  அந்த வரிசையில், தற்போது மீம்ஸ்களைக் காட்டிலும் அடுத்தகட்டமாக டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளார் வடிவேலு. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'காண்டிராக்டர் நேசமணி'  தற்போது டிரெண்டாகியுள்ளது. 

  பிரெண்ட்ஸ் படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சியில், அவரது தலையில் சுத்தியல் விழும். இதையடுத்து, அந்தக் காட்சியில் அவர் தலை சுற்றி கீழே விழுவார். இதனை அடிப்படையாகக் கொண்டு #Pray for Neasamani (நேசமணிக்காக பிரார்த்திக்கவும்) மற்றும் Neasamani என்ற இரண்டு ஹேஷ்டேக்குகள் தேசிய மற்றும் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது. 

  இதோடு இல்லாமல் நேசமணி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், நேசமணி இட்லி சாப்பிட்டார், நேசமணி நலமாக உள்ளார், நேசமணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்ற வகையிலான டிவீட்களும் இந்த ஹேஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகிறது. தற்போது இந்த  ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டாகிவருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai