சுடச்சுட

  

  கமல்நாத் உறவினர்களுக்கு சம்மன் அனுப்ப வருமான வரித் துறை முடிவு

  By DIN  |   Published on : 29th May 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மத்தியப் பிரதேச அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், அந்த மாநில முதல்வர் கமல்நாத்தின் உறவினர்கள் ஆகியோருக்கு வருமான வரித் துறை விரைவில் சம்மன் அனுப்பவுள்ளது.
  மக்களவைத் தேர்தல் சமயத்தில் ரூ.281 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் வருமான வரித் துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவுள்ளது.
  இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  ஹவாலா பணம் தொடர்பாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பவுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  தில்லியிலும், மத்தியப் பிரதேசத்திலும் 52 இடங்களில் கடந்த மாதம் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கும் வருமான வரித் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
  முதல்வர் கமல்நாத் கூறுகையில், வருமான வரித் துறையே போலியாக ஆவணங்களை தயாரித்து சமர்ப்பித்துள்ளது. இதில் உண்மையில்லை என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai