சுடச்சுட

  

  குருநானக் அரண்மனை தகர்ப்பு விவகாரத்தை பாகிஸ்தானிடம் எழுப்ப வேண்டும்: சிரோமணி அகாலிதளம்

  By DIN  |   Published on : 29th May 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gurunanak


  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், குருநானக் அரண்மனையின் ஒரு பகுதியில் தகர்க்கப்பட்ட விவகாரத்தை   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம், பிரதமர் மோடி எழுப்ப வேண்டும் என்று சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.ஹர்சிம்ரத் கெளர் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார். 
  பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம், நாரோவல் நகருக்கு அருகே பத்தன்வாலா கிராமத்தில் சீக்கிய மதகுருவான குருநானக்கின் அரண்மனை இருந்தது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இன்த அரண்மனையின், ஒரு பகுதியை மர்ம கும்பல் சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த கலைப்பொருள்கள் மற்றும் அலங்காரம் மிக்க கதவுகள், ஜன்னல்களை பெயர்த்தெடுத்து சென்று விட்டனர். 
  இந்தச் சம்பவம் சீக்கியர்களின் மனதில் ஆழமான ரணத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும் ஹர்சிம்ரத் கெளர் தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: சீக்கிய மதகுருவான குருநானக்கின் வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை தகர்க்கப்பட்ட விவகாரத்துக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன். 
  பஞ்சாப் மாகாணத்தில் சில விஷமிகளால் அரண்மனை தகர்க்கப்பட்ட விவகாரம், சீக்கியர்களின் மனதை ஆழ்ந்த வேதனைக்குள்ளாக்கி விட்டது. இந்த சம்பவத்தை அந்நாட்டின் வக்ஃபுத்துறை வாரிய அதிகாரிகள் தரப்பிலும் கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. 
  இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் எழுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.  
  சீக்கிய மதத்தின் நிறுவனரான குருநானக் வாழ்ந்த அந்த அரண்மனை நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அதில், குருநானக்கின் படமும், சுவர்களில் பல்வேறு இந்துக் கடவுள்களின் படங்களும் வைக்கப்பட்டிருத்ததன. 
  அந்த அரண்மனைக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து சென்று கொண்டிருந்தனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai