சுடச்சுட

  


  பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.
  2014 மக்களவைத் தேர்தலைவிட கூடுதல் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும்  வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்கு வகித்தவர் எனக் கருதப்படும் அமித் ஷாவுக்கு புதிய அரசில் முக்கியப் பதவி அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இந்த சூழ்நிலையில் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
  இருவரிடையே நடைபெற்ற ஆலோசனை குறித்து செய்தி எதுவும் வெளியாகவில்லை. 
  ஆனால், புதிய அமைச்சரவை குறித்து இருவரும் கலந்தாலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது.
  தற்போது மத்திய அமைச்சர்களாக இருப்பவர்களின் பலர் அதே பதவியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சராக 
  பதவி வகித்த அருண் ஜேட்லி, உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிகிறது.
  எனினும், சிகிச்சைக்கு பிறகும் ஜேட்லி சிறப்பாகவே செயல்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai