மோடி பதவியேற்பு விழாவில் சோனியா பங்கேற்பு

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார். 
மோடி பதவியேற்பு விழாவில் சோனியா பங்கேற்பு


நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார். 

நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (வியாழக்கிழமை) மாலை 7 மணிக்கு மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் என சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்புக்கு விடுக்கப்பட்டது. மம்தா பானர்ஜி தொடக்கத்தில் இந்த அழைப்பை ஏற்ற நிலையில், இன்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படி எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்று டி.ஆர். பாலு மறுப்பு தெரிவித்துவிட்டார். 

இந்த நிலையில், மோடி பதவியேற்கும் விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவிக்கையில், "மியான்மர் அதிபர் வின் மியிந்த், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பெகோ, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, வங்கதேசம் அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறீசேனா, நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத், தாய்லாந்து சிறப்பு தூதர் கிரிஸடா ஆகியோர் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர்" என்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com