எல்.ஜே.பி. கட்சி எம்.பி.க்கள் குழு தலைவராக ராம்விலாஸ் பாஸ்வான் தேர்வு

லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.) கட்சியின் எம்.பி.க்கள் குழுத் தலைவராக அக்கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எல்.ஜே.பி. கட்சி எம்.பி.க்கள் குழு தலைவராக ராம்விலாஸ் பாஸ்வான் தேர்வு


லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.) கட்சியின் எம்.பி.க்கள் குழுத் தலைவராக அக்கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட எல்.ஜே.பி. கட்சி 6 தொகுதிகளில் வென்றது. இதைத் தொடர்ந்து, தில்லியில் அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராம்விலாஸ் பாஸ்வான், கட்சி மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மக்களவைக்கான எல்.ஜே.பி. எம்.பி.க்கள் குழுத் தலைவராக ராம்விலாஸ் பாஸ்வான் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், இந்தத் தகவலை தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் தனது மகன் சிராக் பாஸ்வானுக்கு இடமளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ராம்விலாஸ் பாஸ்வான் கோரிக்கை விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சிராக் பாஸ்வானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதை சிராக் பாஸ்வான் மறுத்தார். அவர் கூறுகையில், மத்திய அமைச்சரவையில் யாருக்கு இடமளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது பிரதமர் மோடியின் தனிப்பட்ட உரிமையாகும். எனினும், புதிய அரசில் எல்.ஜே.பி. கட்சி சார்பில் ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய அமைச்சராக பதவியேற்பார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com