பிரதமர் மோடி பதவியேற்பு விழா: அனைத்து ஆளுநர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: அனைத்து ஆளுநர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) பதவியேற்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள்,


நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) பதவியேற்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர பல்வேறு பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள், தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலதரப்பட்ட பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
வெளிநாட்டுத் தலைவர்கள்: வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பில் வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. இது தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இப்போதுள்ள கிர்கிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் தாய்லாந்து சார்பில் சிறப்புத் தூதர் கிரிசாடா பூன்ராச், மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவ், பூடான் பிரதமர் லோட்டே ஸ்ரிங், வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறீசேனா, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்க மாட்டார் என்று அந்நாடு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com