சுடச்சுட

  

  அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவுக்கு வந்தது

  By DIN  |   Published on : 30th May 2019 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amithsha

  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவுக்கு வந்து விட்டதாக, மாநிலங்களவை செயலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலம், காந்தி நகரில் இருந்து அமித் ஷாவும், பிகார் மாநிலம், பாட்னா சாகிப் தொகுதியில் இருந்து ரவிசங்கர் பிரசாதும், உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் இருந்து ஸ்மிருதி இரானியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவுக்கு வந்தது.
  இவர்களில், அமித் ஷாவும், ஸ்மிருதி இரானியும், குஜராத்தில் இருந்தும், ரவிசங்கர் பிரசாத் பிகாரில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களின் இடங்களில், மக்களவைத் தேர்லில் தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க பாஜக திட்டமிடலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் தற்போது எந்த அவையிலும் உறுப்பினராக இல்லை. எனவே, பிகாரில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அவரைத் தேர்வு செய்து, அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை பாஜக மேலிடம் வழங்கும் என்று தெரிகிறது. இதேபோல், குஜராத்தில் இருந்தும் இருவரை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
  தமிழகத்தின் தூத்துக்குடி தொகுதியில் இருந்து திமுகவைச் சேர்ந்த கனிமொழி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் காலியான இவரது இடத்துக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai