சுடச்சுட

  

  ரூ.10 கோடி பிணைத்தொகையை திருப்பித் தரக் கோரிய கார்த்தி சிதம்பரம் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  By DIN  |   Published on : 30th May 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme court


  உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே செலுத்தியுள்ள பிணைத்தொகை ரூ.10 கோடியை திருப்பித் தருமாறு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த  மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு, அவர் வெற்றி பெற்றுள்ள மக்களவைத் தொகுதியில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.  
  ஏர்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா மீதான வழக்குகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்டவெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள ரூ.10 கோடியை பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என கடந்த மே 7ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் அத்தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
  இந்நிலையில், உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தான் ஏற்கெனவே செலுத்தியுள்ள ரூ.10 கோடி பிணைத்தொகையை திருப்பி அளிக்குமாறு கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்தத் தொகையை கடன் வாங்கி செலுத்தியிருந்ததால், அத்தொகைக்கு வட்டி செலுத்தி வருவதாகவும் அதில் கூறியிருந்தார்.  
  இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அனிருத்தா போஸ் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.  கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்த அமர்வு நீதிபதிகள் குழுவின் உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு முறை நீங்கள் (கார்த்தி) வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும்போதும், ரூ.10 கோடி வீதம் பிணைத்தொகையாக நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த வேண்டும். இத்தொகையை, வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா வந்ததும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு, ஏற்கெனவே செலுத்திய தொகையையும் சேர்த்து ரூ.20 கோடியை  உங்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்.  பிணைத்தொகை செலுத்தாதபட்சத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்கள் தொகுதியில் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று அதில் அறிவுறுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai