சுடச்சுட

  

  வேலைக்காரப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த 700 ரூபாய் 75 லட்சமாக மாறியதன் பின்னணி? சிபிஐ விசாரிக்கிறது

  By DIN  |   Published on : 30th May 2019 03:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Indian-Rupees


  சினிமா படங்களில் ஒரு பாடலிலேயே கதாநாயகன் கோடீஸ்வரனாகிவிடுவார். ஆனால் நமக்கெல்லாம் எப்போங்க அந்த மாதிரி அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று அங்கலாய்ப்பவர்கள் நிச்சயம் இந்த செய்தியை மேற்கொண்டு படிக்காமல் போய்விடுவது மன நலனுக்கு நல்லது.

  சரி இந்த மிரட்டலையும் தாண்டி படிக்க வந்துவிட்டீர்கள். வாருங்கள் போகலாம்.

  வீட்டு சேலைக்காரப் பெண் சரிதா. இவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.700, கடந்த 32 மாதங்களில் ரூ.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் எந்த மேஜிக்கும் இல்லை.

  சென்னையில் உள்ள பெட்ரோலியம் வெடிபொருள் மற்றும் பதுகாப்பு அமைப்பின் இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டாளராக பணியாற்றியவர் ஏ.கே. யாதவ். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக 311.3% அளவுக்கு அதாவது ரூ.98.89 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது.

  இவரது வீட்டு வேலைக்காரப் பெண்தான் சரிதா. தனது பெயரில் மட்டுமல்லாமல், தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணின் வங்கிக் கணக்கையும், தனது லஞ்ச லாவண்யத்துக்கு யாதவ் பயன்படுத்தியிருப்பதை சிபிஐ கண்டுபிடித்துவிட்டது.

  தொடர்கிறது விசாரணை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai