சுடச்சுட

  

  மத்திய அமைச்சரவையில் இடம் பெறுகிறார் அமித்ஷா: உறுதி செய்த பாஜக தலைவரின் ட்வீட்? 

  By DIN  |   Published on : 30th May 2019 05:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amith sha

   

  புது தில்லி: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ளார் என்பதை உறுதி செய்வதைப் போல , குஜராத் மாநில பாஜக தலைவர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

  நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான் பாஜக அரசு வியாழன் மாலை 7 மணி அளவில் பதவியேற்க உள்ளது. இந்த அமைச்சரவையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இடம்பெறுவார் என்ற ஹேஷ்யங்கள் பாஜக வட்டாரத்தில் உலவி வந்தன.

  இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ளார் என்பதை உறுதி செய்வதைப் போல , குஜராத் மாநில பாஜக தலைவர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

  "அமித்ஷாவை சந்தித்து மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்ததற்கு வாழ்த்துகள் தெரிவித்தேன்" என்று குஜராத் பாஜக தலைவர் ஜித்து வகானி சற்று முன்னர் ட்வீட் செய்துள்ளார்.

  அதன்படி மத்திய அமைச்சரவையில் இடம் பெறவுள்ள அமித்ஷாவுக்கு  நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

  அதேசசமயம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த ஜே.பி. நட்டா, பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai