எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு

தில்லியில் வெள்ளிக்கிழமை (மே 31) எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு


தில்லியில் வெள்ளிக்கிழமை (மே 31) எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்-சமாஜவாதி ஆகிய கட்சிகள் அமைத்த கூட்டணிக்கும் வெற்றி கிடைக்கவில்லை. தமிழகத்தில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதல் தரும் முடிவுகள் கிடைத்தன. தேசிய அளவில் கடந்த தேர்தலைவிட அதிக இடங்களைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து ஏற்கெனவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. இது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜுன் 6-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட இருப்பதால் அதில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் யார் தலைமை வகிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com