கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா

டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக சந்தேகிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.
கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா


டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக சந்தேகிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.
அந்நியச் செலாவணி தொடர்பான அரையாண்டு அறிக்கையை அமெரிக்க நிதித் துறை அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 40 பக்கங்களில் உள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, இந்தியா-
அமெரிக்கா இடையேயான அந்நியச் செலாவணியில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே, டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக, சந்தேகிக்கப்படும் பட்டியலில் இருந்து இந்திய கரன்சி நீக்கப்படுகிறது. இதேபோல், ஸ்விட்சர்லாந்து கரன்சியும் நீக்கப்படுகிறது.
எனினும், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகள் இன்னும் அந்தப் பட்டியலில் உள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரன்சி கண்காணிப்பு பட்டியலில் முதல் முறையாக கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவை அமெரிக்கா சேர்த்தது. அந்தப் பட்டியலில், இந்தியா மட்டுமன்றி சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளையும் அமெரிக்கா சேர்த்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த 2018 அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த அறிக்கை வெளியிடும்போது இந்தியாவின் பெயர் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி, கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com