கார்கில் போர் வீரருக்கு வெளிநாட்டவர் முத்திரை

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், வெளிநாட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டு


அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், வெளிநாட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டார். 
கார்கில் போரில் பங்கேற்ற முகமது சனாவுல்லா (52) என்ற அந்த முன்னாள் ராணுவ அதிகாரி, கடந்த 2017-ஆம் ஆண்டு கெளரவ லெப்டினன்ட்டாக ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.  
இந்நிலையில், குவாஹாட்டியில் உள்ள எல்லைக் காவல் படை அவருக்கு செவ்வாய்க்கிழமை ஓர் அழைப்பாணை அனுப்பியது. 
அதுதொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜரான சனாவுல்லா, உடனடியாக கைது செய்யப்பட்டு கோவால்புராவில் உள்ள தடுப்புக் காவல் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். 
சந்தேகத்துக்கிடமான குடிமக்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காணும் எல்லை காவல் படையில் தற்போது துணை ஆய்வாளராக சனாவுல்லா பணிபுரிந்து வரும் நிலையிலும், அவர் இத்தகைய நிலையை எதிர்கொண்டார். 
அஸ்ஸாமின் போகோ நகரில் உள்ள வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயம் கடந்த ஆண்டு சனாவுல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதுதொடர்பாக அவர் 4-5 முறை தீர்ப்பாயம் முன்பாக ஆஜராகியிருந்தார். அப்போது ஒரு விசாரணையில் அவர் தான் ராணுவத்தில் இணைந்த ஆண்டை 1978 என்று தவறாகக் குறிப்பிட்டார். 
அதை அடிப்படையாகக் கொண்டு அவர் ஒரு வெளிநாட்டவர் என்று தீர்ப்பாயம் அறிவித்துவிட்டதன் அடிப்படையில், மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உண்மையில், சனாவுல்லா 1987-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்ததாக அவரது உறவினர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com