சுடச்சுட

  


  உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாஜக நூலகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலாக கருதப்படும் குரான் புத்தகம் இடம்பெற்றுள்ளது.
  இதுகுறித்து அந்த மாநில ஊடகப் பிரிவு தலைவர் தேவேந்திர பாசின் தெரிவித்துள்ளதாவது:
  ஒவ்வொரு மதத்தையும் சமமாக பாவிப்பதே பாஜகவின் அடிப்படைக் கொள்கை. அதனை எடுத்துக்காட்டும் வகையிலேயே கட்சியின் நூலகத்தில் குரான் பிரதி இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. பாஜக தொண்டர்கள் புனித குரானின் உயரிய கருத்துகளைத் தெரிந்து கொள்ளும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
  உத்தரகண்ட் மாநிலத்தின் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா வழிகாட்டுகாட்டுதலின்பேரில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 400 புத்தகங்கள் வரை இடம்பெற்றுள்ளன.
  நாட்டில் உள்ள சிறுபான்மையினரையும் சென்றடையும் வகையில் நாம் சேவையாற்றிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai