சுடச்சுட

  

  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி

  By DIN  |   Published on : 31st May 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ashokkhelot

  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
  இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  மத்தியில் புதிய பாஜக அரசு பதவியேற்கும் முன்னரே, மேற்கு வங்கம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் அரசுகளுக்கு இடையூறு அளிக்கும் செயலிலும், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  இந்த முயற்சிக்கு, ஜெய்ப்பூரில் இருந்து எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்தப் பதிவுகளில் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.
  ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இருப்பினும் அண்மையில் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், ராஜஸ்தானில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.
  இதனால் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் பதவியிலிருந்து அசோக் கெலாட் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த தகவலை ராஜஸ்தான் மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே நிராகரித்துள்ளார்.
  மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியும், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியும் நடைபெறுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai