சுடச்சுட

  

  காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

  By DIN  |   Published on : 31st May 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kashmir

  காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

  காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் டிரகத் சுகன் பகுதியில் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா? என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். 

  இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இருத்தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் தேடு வேட்டை நடந்து வருகிறது.

  இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai