சுடச்சுட

  

  தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க காங். செய்தித் தொடர்பாளர்களுக்கு தடை

  By DIN  |   Published on : 31st May 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  randeep-surjevala


  தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத மேடைகளில் காங்கிரஸ் சார்பில் செய்தித் தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என அக்கட்சி முடிவெடுத்துள்ளது. 
  இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
  தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால், முக்கிய தலைவர்கள் பலர் ராகுலை சந்தித்து ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்று தலைவர் பதவியில் தொடரும்படி வற்புறுத்தி வருகின்றனர்.
  இந்த நிலையில், ராகுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்வாரா? மாட்டாரா? என்ற சந்தேக்கத்துக்கிடமான சூழலில், தொலைக்காட்சிகளில் விவாத மேடைகளில்  கேட்கப்படும் சங்கடமான கேள்விகளை தவிர்க்கும் நோக்கத்தில் ஒரு மாதத்துக்கு செய்தித் தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என கட்சி முடிவெடுத்துள்ளது. 
  எனவே, அனைத்து ஊடகங்கள்/ ஆசிரியர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் சார்பில் யாரையும் பேச அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
  மக்களவைத் தேர்தலில் 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பெருவாரியான இடங்களில் தோற்றதற்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai