சுடச்சுட

  

  மகாராஷ்டிரம்: ஹிந்து பெயர்களை வைத்துள்ள முஸ்லிம் மக்கள்!

  By DIN  |   Published on : 31st May 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மகாராஷ்டிரத்தில் வசிக்கும் தத்வி பில் முஸ்லிம் பழங்குடியின சமூகத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஹிந்து மத பெயர்கள் சூட்டப்பட்டுள்ள ஆச்சரியமான தகவல் தெரிய வந்துள்ளது.
  மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்த மாணவி பாயல் தத்வி திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு ஜாதி ரீதியிலான கிண்டல் பேச்சுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த மாணவியை பற்றிய விவரங்களை சேகரித்தபோது, அவரது சமூகத்தில் நிறைய பேருக்கு ஹிந்து பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
  இதுதொடர்பாக பாயல் தத்வியின் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,  ஜல்கான் மாவட்டத்தில் தத்வி பில் முஸ்லிகள் சுமார் 60, 000  பேர் வசிக்கின்றனர். அவர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றி வந்தாலும், அவர்களில் பலரது பெயர் ஹிந்து மதத்தை சேர்ந்ததாக உள்ளது. புதிதாக பிறக்கும் நிறைய குழந்தைகளுக்கு ஹிந்து மத பெயர் சூட்டப்படுகிறது. பல இளைஞர்களுக்கும் ஹிந்து மத பெயர் இருக்கும். 
  அந்த மக்கள் மிக தீவிரமாக இஸ்லாமிய மதக் கொள்கைகளை பின்பற்ற மாட்டார்கள். ஹிந்து மத கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்கள் மசூதிக்கு சென்று தொழுகை செய்தாலும், ஹிந்து கடவுள்களை காணும் போது கைகூப்பி வணங்குவர்  என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai