புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை  வெளியிட்டது மத்திய அரசு 

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெள்ளியன்று நாடு முழுமைக்கான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை  வெளியிட்டது மத்திய அரசு 

புது தில்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெள்ளியன்று நாடு முழுமைக்கான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதையடுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமர் மோடி வியாழனன்று இரண்டாவது முறையாக பதவி யேற்றுக்  கொண்டார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் மனிதவள மேம்பாட்டுத்துறை ரமேஷ் போக்கிரியால் நிஷங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெள்ளியன்று நாடு முழுமைக்கான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையானது   மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com