சுடச்சுட

  

  புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ஜூன் 17ஆம் தேதி துவக்கம்? 

  By DIN  |   Published on : 31st May 2019 07:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parliment

   

  புது தில்லி: இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள மோடி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூன் 17ஆம் தேதி அன்று துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதையடுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமர் மோடி வியாழனன்று இரண்டாவது முறையாக பதவி யேற்றுக்  கொண்டார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  

  இந்நிலையில் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள மோடி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூன் 17ஆம் தேதி அன்று துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.

  அதேநேரம் ஜூன் 19ஆம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai