சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.   

இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட  நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, தருமபுரி மக்களவைத் தொகுதி  உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞர் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை-சேலம் இடையிலான பசுமை (எட்டு) வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது.  

மேலும், இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனுவை உச்சநீதிமன்றம் ஜூன் 3ஆம் விசாரிக்க உள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் சார்பில் வழக்குரைஞர்கள் கே. பாலு, எஸ். தனஞ்செயன் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com