ராகுலைச் சந்தித்தார் குமாரசாமி: கர்நாடக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தார்.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வியாழக்கிழமை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வியாழக்கிழமை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தார்.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி தோல்வியடைந்தது. அதே நேரத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்கு ஒருவரை மற்றொருவர் குற்றம்சாட்டினர். இதனால், கர்நாடக காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் பாஜக மூத்த தலைவரான எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினர். இதையடுத்து, கர்நாடகத்தில் கூட்டணி அரசு தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால் பெங்களூருக்கு வந்து கட்சியினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தில்லிக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்ட குமாரசாமி, ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அவர் பதவி விலகக் கூடாது என்று இந்த சந்திப்பின்போது குமாரசாமி வலியுறுத்தினார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com