
சிறப்பு பாதுகாப்புப் படை நிா்வாகத் தலைவா் பதவி ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் பூஷணுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சரவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிகாா் மாநில 1987-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் பூஷண், அமைச்சரவை செயலகத்தின் ஒருங்கிணைப்பு செயலராக உள்ளாா்.
தற்போது பாதுகாப்பு செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பாதுகாப்புப் படை, பிரதமா், முன்னாள் பிரதமா்கள், அவா்களது குடும்பத்தினா் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கும் தனி பிரிவாகும். இப்படையின் நிா்வாகத் தலைவராக, அமைச்சரவை செயலகத்தின் பாதுகாப்பு செயலா் செயல்படுவாா். மேலும், ஜாமா் கருவிகளை மாநில அரசுகளும், மத்திய ஆயுதப் படையும் வாங்குவதற்கு அவா்தான் அனுமதி அளிக்க வேண்டும்.
இதனிடையே, சுரங்கத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலராக நிலக்கரி துறை செயலா் அனில் குமாா் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அந்தப் பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி அனில் முகிம் விடுப்பில் செல்வதால் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அனில் குமாா் ஜெயின் அந்தப் பொறுப்பை கவனிப்பாா் என்று மற்றொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.