பிப்ரவரி 27 நினைவிருக்கிறதா? பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட பாஜக இணையதளம்!

தில்லி பாஜக இணையதளத்தை பாகிஸ்தானியர்கள் ஹேக் செய்துள்ளனர்.
பிப்ரவரி 27 நினைவிருக்கிறதா? பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட பாஜக இணையதளம்!


தில்லி பாஜக இணையதளத்தை பாகிஸ்தானியர்கள் ஹேக் செய்துள்ளனர்.

முகமது பிலால் டீம் எனும் ஹேக்கர் அமைப்பு தில்லி பாஜக இணையதளத்தை ஹேக் செய்துள்ளது. "என்னால் நிறைய பொய் சொல்ல முடியும், அபிநந்தனுக்கு வழங்கியதுபோல் எனக்கும் வீர் சக்ரா விருது வழங்கப்படுமா" என்று அந்த ஹேக்கர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் முடிந்தால் பிடித்துக் காட்டவும் என்ற அர்த்தம் கொண்ட மின்னஞ்சலையும் குறிப்பிட்டுள்ளது.

இதோடு, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன், சில போலீஸ் அதிகாரிகளுடன் இருப்பதுபோல் போட்டோஷாப்களால் புகைப்படத்தை உருவாக்கி, பிப்ரவரி 27 நினைவிருக்கிறதா என்று குறிப்பிட்டுள்ளனர். இத்துடன், "திரைப்படங்கள் எடுங்கள், உங்களால் சண்டையிட முடியாது" என்றும் ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

தில்லி பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், தற்போது அந்த இணையதளம் தாமாக அதன் பிரதான இணையதளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தாண்டு மே மாதம் இதேபோல் தில்லி பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. அப்போது பீஃப் உணவுகளின் புகைப்படங்கள் அதில் பதிவேற்றப்பட்டது.

மேலும் படிக்க: மோடி பதவியேற்பு விழா இடையே ஹேக் செய்யப்பட்ட தில்லி பாஜக இணையதளம்

முன்னதாக, பிப்ரவரி 27-ஆம் தேதி பாகிஸ்தான் விமானப் படை இந்திய வான் எல்லைக்குள் நுழைய முற்பட்டது. அதை இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதில் இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார்.

அதேசமயம், இந்த சண்டையில் அபிநந்தனின் விமானமும் பாதிப்புக்குள்ளாக, அவர் பாராசூட் மூலம் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். இதன்பிறகு, இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் இந்இந்தியாவின் வசம் ஒப்படைக்கப்பட்டார். இதைக் குறிப்பிட்டே பிப்ரவரி 27 நினைவிருக்கிறதா என்று ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். அபிநந்தனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com