தில்லி உடல் நலத்திற்கு தீங்கானது: காங்கிரஸ் எம்பி டிவீட்

தில்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுவைக் குறிப்பிட்டு தில்லி உடல் நலத்திற்கு தீங்கானது என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் டிவீட் செய்துள்ளார்.
தில்லியில் சுகாதார அவசர நிலை
தில்லியில் சுகாதார அவசர நிலை


தில்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுவைக் குறிப்பிட்டு தில்லி உடல் நலத்திற்கு தீங்கானது என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் டிவீட் செய்துள்ளார்.

தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு அதிகரிக்கக் தொடங்கிய காற்று மாசு, நிகழாண்டில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான நிலைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக, தில்லியில் சுகாதார அவசர நிலையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாடு ஆணையம் (இபிசிஏ) அறிவித்தது. இதையடுத்து, நவம்பா் 5ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என தில்லி அரசு அறிவித்தது.

மேலும், காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இபிசிஏ விதித்துள்ளது. தில்லி புகை மண்டலமாக இருப்பதால் பலரும் முகக்கவசம் அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தில்லியின் பிரபலமான குதுப் மினார் நினைவுச் சின்னத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, தில்லி உடல் நலத்திற்கு தீங்கானது என குறிப்பிட்டுள்ளார். 

அந்த டிவீட்டில், சிகரெட் அட்டையில் சிகரெட்டுகளுடன் சிகரெட்டாக குதுப் மினாரும் இடம்பெற்றிருப்பதுபோன்ற புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.  மேலும் அதில், "எத்தனை நாட்கள் சிகரெட்டுடனும், பீடியுடனும் வாழப்போகிறீர்கள். தில்லி-என்சிஆர் பிராந்தியத்துக்கு வந்து சில நாட்களை கழித்துப் பாருங்கள்: தில்லி சுற்றுலாத் துறை

தில்லி உடல் நலத்திற்கு தீங்கானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவருடைய இந்த டிவீட்டை சிலர் அரசியலாக்குவதாக விமரிசித்துள்ளனர். மற்ற சிலர், இந்தப் பிரச்னையைத் தடுக்க மற்ற மாநில அரசுகளும் முயல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com