Enable Javscript for better performance
அஸ்ஸாமில் இரண்டு பள்ளி பேருந்துகள் மோதி விபத்து: 14 மாணவர்கள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அஸ்ஸாமில் இரண்டு பள்ளி பேருந்துகள் மோதி விபத்து: 14 மாணவர்கள் காயம்

    By DIN  |   Published on : 05th November 2019 01:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    road_accident

    அஸ்ஸாமில் இரண்டு பள்ளி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 மாணவர்கள் காயமடைந்தனர். 

    அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தில் உள்ள லோக்ரா பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுடன் பள்ளி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது நபர் ஒருவர் குறுக்கே வரவே அவர் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். 

    இந்நிலையில் அந்தப் பேருந்தை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த மற்றொரு பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 14 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai