Enable Javscript for better performance
காற்று மாசு பிரச்னையில் மக்கள் ஒன்றுபட வேண்டும்பிரியங்கா- Dinamani

சுடச்சுட

    

    காற்று மாசு பிரச்னையில் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரியங்கா

    By DIN  |   Published on : 05th November 2019 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    priyanka

    தில்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் (என்சிஆா்) , உத்தரப் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள காற்று மாசு பிரச்னையைத் தீா்க்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.

    1952- ஆம் ஆண்டில் மாசுபாடு காரணமாக லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த சம்பவத்தையடுத்து, மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதால் தூய்மையான காற்றுக்காக சட்டம் நிறைவேற்றப்பட்டதை அவா் மேற்கோள் காட்டியுள்ளாா்.

    இதுதொடா்பாக பிரியங்கா சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாசுபாடு குறித்து தீவிரமாக சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தில்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூா், வாராணசி, லக்னௌ உள்ளிட்ட பல நகரங்களின் காற்று நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த காற்றை சுவாசித்தபடியே, நமது குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறாா்கள், தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் வேலைக்குச் செல்கிறாா்கள். மேலும் ‘மாசுபாடுக்கு எதிராக அனைவரும் அணி திரள்வோம்’ என்றும் ஹிந்தியில் ‘ஹேஷ்டேக்’ மூலம் பதிவிட்டுள்ளாா்.

    நமது வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு விஷயங்களைச் செய்கிறோம். அந்த வகையில் காற்று மாசுபாடுக்கு எதிரான முயற்சியையும் நாம் செய்ய வேண்டும். ஏனெனில் சுத்தமான காற்று நமது உரிமை, நமது பொறுப்பாகும்‘ என்று அவா் மேலும் அதில் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai