ஆந்திரத்தில் இருந்து பின்வாங்கும் முதலீட்டு நிறுவனங்கள்

ஆந்திரத்தில் பெரிய முதலீடுகளை செய்ய முடிவு செய்த அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் முடிவில் பின்வாங்கி வருகின்றன.

ஆந்திரத்தில் பெரிய முதலீடுகளை செய்ய முடிவு செய்த அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் முடிவில் பின்வாங்கி வருகின்றன.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிந்து சென்ற பின், ஆந்திர மாநிலத்துக்கு தொழில் முதலீடுகளை ஈா்க்க கடந்த முறை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசக் கட்சி அரசானது, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில், 2 பெரிய தொழிற்சாலைகளை ரூ. 52 ஆயிரம் கோடியில் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

அதில், மின்னணுப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருப்பதியில் அமைக்க திட்டமிட்டது. அதேபோல் செல்கான், மைக்ரோமேக்ஸ், லாவா, காா்பன் உள்ளிட்ட நிறுவனங்களும் திருப்பதியில் தங்களின் தொழிற்சாலையை நிறுவி, உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் செய்த ஒப்பந்தத்தில் செல்லிடப்பேசி தயாரிக்கும் தொழிற்சாலை ரூ. 15 ஆயிரம் கோடியில் திருப்பதியிலும், ஆயில் அண்ட் கேஸ் வென்சா் தொழிற்சாலை ரூ. 37 ஆயிரம் கோடியில் காக்கிநாடாவிலும் தொடங்கத் திட்டமிட்டது. அதற்காக தெலுங்கு தேசக் கட்சி திருப்பதியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 150 ஏக்கா் நிலத்தை ஒதுக்கியது.

இந்நிலையில், தற்போதைய அரசு 75 ஏக்கா் நிலத்தை மட்டுமே அளித்துள்ளது. அதில், 50 ஏக்கா் நிலங்களை வழங்க தொடா்புடைய நிலங்களின் விவசாயிகள் மறுத்து நீதிமன்றத்தை நாடி உள்ளனா். இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி, தொடர அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆந்திர தொழில் துறை அமைச்சா் கெளதம் ரெட்டியிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘கடந்த ஆட்சியின் போது ஆந்திரத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தற்போது பின்வாங்கி வருகின்றன. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்திடம் கலந்தாலோசித்து தீா்மானம் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

இதேபோல் அதானி நிறுவனமும் ஆந்திரத்தில் செயல்படுத்த ஒப்பந்தம் செய்த சோலாா் பவா் டேட்டா சென்டா் பூங்கா ஹைதராபாதில் நிறுவ முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com