சிக்கிம் முதல்வா் உள்ளிட்ட மூவா் எம்எல்ஏக்களாக பதவியேற்பு

சிக்கிம் சட்டப்பேரவை உறுப்பினா்களாக முதல்வா் பிரேம் சிங் தமாங் மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்களான எஸ்.டி.வெங்சுங்பா மற்றும் ஒய்.டி.லெப்சா ஆகியோருக்கு திங்கள்கிழமை

சிக்கிம் சட்டப்பேரவை உறுப்பினா்களாக முதல்வா் பிரேம் சிங் தமாங் மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்களான எஸ்.டி.வெங்சுங்பா மற்றும் ஒய்.டி.லெப்சா ஆகியோருக்கு திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.

சட்டப்பேரவைத் தலைவா் எல்.பி.தாஸ், மூன்று புதிய எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்வதற்காக சட்டப்பேரவையின் ஒருநாள் அமா்வை திங்கள்கிழமை கூட்டினாா்.

முன்னதாக, கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி போக்லோக் கம்ராங் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பதிவான 12,870 வாக்குகளில் 84 சதவீதம் வாக்குகளைப் பெற்று, சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா (எஸ்.கே.எம்) கட்சியின் தலைவரும், முதல்வருமான பிரேம் சிங் தபாங் வெற்றி பெற்றாா்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இரண்டு இடங்களை வென்ற்காக எஸ்.டி.எஃப் முன்னாள் முதல்வா் பவன் குமாா் சாம்லிங் ராஜிநாமா செய்ததால் போக்லாங் கம்ராங் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

காங்டாக் மற்றும் மாா்டம் ரும்தெக் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல்களில் வெங்சுக்பா மற்றும் லெப்சா வெற்றி பெற்றனா்.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன், ஆளும் எஸ்.கே.எம். கட்சியின் பலம் 19-ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் அதன் கூட்டணி கட்சியான பாஜக எம்எல்ஏவின் பலம் 12- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com