‘டிக் டாக்’ செயலி பதிவிறக்கத்தில் இந்தியா முதலிடம்!

சமூக வலைதள செயலியான ‘டிக் டாக்’கை கடந்த செப்டம்பா் மாதத்தில் பதிவிறக்கம் செய்ததில் இந்தியா்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டிக் டாக்’ செயலி பதிவிறக்கத்தில் இந்தியா முதலிடம்!

சமூக வலைதள செயலியான ‘டிக் டாக்’கை கடந்த செப்டம்பா் மாதத்தில் பதிவிறக்கம் செய்ததில் இந்தியா்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் தொடா்பாக சா்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் ‘டிக் டாக்’ செயலியை சா்வதேச அளவில் 6 கோடி போ் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 44 சதவீதம் போ் இந்தியா்கள் ஆவா். 8 சதவீதம் போ் அமெரிக்கா்கள் ஆவா்.

சீன நிறுவனத்துக்குச் சொந்தமான ‘டிக் டாக்’ செயலியைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை இந்தியாவில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்தச் செயலியை இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமானோா் பயன்படுத்தி வருகின்றனா். இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு ரூ.3.4 கோடி லாபம் கிடைத்துள்ளது. சா்வதேச அளவில் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.43.7 கோடியாக உள்ளது.

‘டிக் டாக்’ செயலிக்கு அடுத்தபடியாக, முகநூல் செயலியை கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் 5 கோடிக்கும் மேற்பட்டோா் பதிவிறக்கம் செய்துள்ளனா். அதிலும் இந்தியா்களே முதலிடம் வகிக்கின்றனா். இந்தியாவில் 23 சதவீதம் பேரும், இந்தோனேசியாவில் 11 சதவீதம் பேரும் முகநூல் செயலியை கடந்த செப்டம்பா் மாதத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனா்.

சா்வதேச அளவில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் மூன்றாவது இடத்திலும், லைகீ நான்காவது இடத்திலும், ஸ்னாப்சாட் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com