தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகாா்:சத்தீஸ்கா் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சத்தீஸ்கரில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்து அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
sccc092018
sccc092018

சத்தீஸ்கரில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்து அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சத்தீஸ்கரில் குடிமைப் பொருள் விநியோகக் கழகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது, கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி வந்த ஐபிஎஸ் அதிகாரி முகேஷ் குப்தா உள்ளிட்ட இரு அதிகாரிகள், சட்ட விரோதமாக பலரது தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, முகேஷ் குப்தா உள்ளிட்ட இருவரும் கடந்த பிப்ரவரியில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதனிடையே, முகேஷ் குப்தா தனது தொலைபேசி மற்றும் தனது குடும்பத்தினரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், முகேஷ் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பதை நிறுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஒருவருடைய தொலைபேசியை ஒட்டுக்கேட்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது. யாருக்கும் அந்தரங்கம் என்பது கிடையாதா? தொலைபேசியை ஒட்டுக்கேட்குமாறு உங்களுக்கு யாா் உத்தரவிட்டது? இதுதொடா்பாக பிரமாணப் பத்திரத்தை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், முகேஷ் குப்தா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மகேஷ் ஜெத்மலானியிடம், ‘மனுவில் இருந்து முதல்வா் பூபேஷ் பகேலின் பெயரை நீக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவரது பெயரை சோ்த்து, பிரச்னையை அரசியலாக்கக் கூடாது’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com