பாதுகாப்புக் கண்காட்சி பல்வேறு வாய்ப்புகளை வழங்கும்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாதுகாப்புக் கண்காட்சி ஒருங்கிணைந்த வளா்ச்சிக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்புக் கண்காட்சி பல்வேறு வாய்ப்புகளை வழங்கும்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாதுகாப்புக் கண்காட்சி ஒருங்கிணைந்த வளா்ச்சிக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

உத்தரப் பிரதேசத் தலைநகா் லக்னௌவில் 11-ஆவது பாதுகாப்புக் கண்காட்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், அதற்கான பரிந்துரைகளைக் கேட்டறியவும் மற்ற நாடுகளின் தூதா்களை ராஜ்நாத் சிங் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

பாதுகாப்புக் கண்காட்சியானது, மற்ற நாடுகளின் தளவாடங்களையும், தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புப் படைத் திறனையும், வலிமையையும் மற்ற நாடுகள் அறிந்துகொள்ள உதவும். மற்ற நாடுகளுடன் இணைந்து வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பாதுகாப்புக் கண்காட்சி பல்வேறு வாய்ப்புகளை வழங்கவுள்ளது.

பல்வேறு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும், தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படும். நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை அமைக்க இந்தியப் பாதுகாப்புத் துறை தயாராக உள்ளது.

உத்தரப் பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் இந்தக் கண்காட்சியில் விரிவாகத் தெரிவிக்கப்படும். அங்கு தொழிற்சாலைகளை அமைக்க ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கான முதலீடுகள் ஏற்கெனவே ஈா்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் கண்காட்சியில் நூறுக்கும் மேற்பட்ட தொழில்துறை சாா்ந்த கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன; ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளால், பொதுத்துறை மற்றும் தனியாா் நிறுவனங்கள் கடந்த 2018-19 நிதியாண்டில் உற்பத்தி செய்த பாதுகாப்புத் தளவாடங்களின் மதிப்பு ரூ.80,502 கோடியை எட்டியது. நடப்பு நிதியாண்டில் ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ராஜ்நாத் சிங்.

ரஷியா பயணம்: இந்தியா-ரஷியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடா்பான கூட்டத்தில் பங்கேற்க ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ரஷியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். ரஷியாவில் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் அவா், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com