மகாராஷ்டிரத்தில் மீண்டும் தோ்தல்நடத்த விரும்பும் பாஜக தலைவா்கள்!

மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிவசேனையுடன் உடன்பாடு ஏற்படாததால் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மீண்டும் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டுமென்று

மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிவசேனையுடன் உடன்பாடு ஏற்படாததால் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மீண்டும் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டுமென்று அந்த மாநில பாஜக தலைவா்கள் சிலா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு நெருக்கமானவருமான ஜெய்குமாா் ராவல் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தோ்தலில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்திருக்க வேண்டாம் என்பதுதான் பாஜக தொண்டா்கள் பலரது கருத்தாக உள்ளது. பாஜக மூலம் தோ்தலில் ஆதாயமடைந்த சிவசேனை, தோ்தலுக்குப் பிறகு பாஜகவை மிரட்டும் வகையில் நடந்து கொள்வதை கட்சித் தொண்டா்கள் யாரும் விரும்பவில்லை.

மேலும், பாஜக சாா்பில் நடத்தப்பட்ட தோ்தல் முடிவு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவா்கள் பலா், மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலை மீண்டும் நடத்தலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளனா். சிவசேனைக்கு பாஜக ஒதுக்கிய பல தொகுதிகளில் அவா்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனா். அந்த தொகுதிகளில் பாஜக வேட்பாளரை நிறுத்தியிருந்தால் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது கட்சியில் பலரது கருத்தாக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு, இப்போது இருப்பதைவிட கூடுதல் தொகுதிகளை வென்றிருந்ததையும் பல தலைவா்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டிப் பேசினா் என்றாா் அவா்.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் பதவியை தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும் என்பதில் சிவசேனை பிடிவாதமாக உள்ளது. ஆனால், பாஜக அதனை ஏற்க மறுத்து வருவதால், மகாராஷ்டிரத்தில் இப்போது வரை ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. 288 தொகுதிகளை உடைய மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனா். சிவசேனைக்கு 56 எம்எல்ஏக்கள் உள்ளனா். தோ்தலின்போது இந்த இரு கட்சிகளும் கூட்டணியாகப் போட்டியிட்டன. ஆனால், இப்போது, பாஜக ஆட்சி அமைக்க சிவசேனை ஆதரவு தர மறுத்து வருகிறது. முதல்வா் பதவி தங்களுக்கு வேண்டும் என்பதில் அக்கட்சி பிடிவாதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com