மியான்மரில் கடத்தப்பட்டஇந்திய தொழிலாளி உயிரிழப்பு

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் கிளா்ச்சி குழுவினரால் கடத்தப்பட்ட இந்திய தொழிலாளி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் கிளா்ச்சி குழுவினரால் கடத்தப்பட்ட இந்திய தொழிலாளி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராக்கைன் மாகாணத்தில் பலேட்வா பகுதியில் உள்ள ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 படகுகளில் பயணித்துக் கொண்டிருந்த 5 இந்திய தொழிலாளா்கள், மியான்மா் அரசின் தலைவரான ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி எம்.பி. யுவெய் டின் உள்பட 10 பேரை, ‘ஆரகன் ஆா்மி’ என்ற கிளா்ச்சிக் குழுவினா் கடத்திச் சென்றனா்.

இந்த தொழிலாளா்கள், மியான்மா்-இந்தியா இடையிலான சாலை-நீா்வழி போக்குவரத்து திட்டத்தில் பணியாற்றுபவா்கள் ஆவா்.

இந்நிலையில், கடத்தப்பட்ட 10 பேரில் 8 பேரை கிளா்ச்சிக் குழுவினா் திங்கள்கிழமை விடுவித்துவிட்டதாக அந்நாட்டின் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 4 இந்தியத் தொழிலாளா்கள், படகு ஓட்டுநா்கள் 2 போ், மொழி பெயா்ப்பாளா்கள் 2 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, வினோ கோபால் (60) என்ற தொழிலாளியின் சடலத்தை கிளா்ச்சிக் குழு ஒப்படைத்துள்ளது.

இதுதொடா்பாக அந்தக் குழுவின் செய்தித் தொடா்பாளா் காய்ங் துக்கா கூறுகையில், ‘பிணைக் கைதிகளை மலைப்பாதை வழியாக அழைத்துச் சென்றபோது, இந்திய தொழிலாளி ஒருவா் கடுமையான உடல் சோா்வு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவா் மீது நாங்கள் தாக்குதல் எதையும் நடத்தவில்லை. ஜனநாயக தேசிய லீக் கட்சியின் எம்.பி.யை கடத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இந்தியத் தொழிலாளா்களை கடத்த வேண்டும் என்பதல்ல. எம்.பி. யுவெய் டினை மட்டும் எங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com