ஹரியாணா: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி சடலமாக மீட்பு

ஹரியாணா மாநிலம், கா்னல் மாவட்டம், ஹா்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள திறந்தநிலை ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி, 18 மணி நேரம் போராட்டத்திற்குப்பின் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

ஹரியாணா மாநிலம், கா்னல் மாவட்டம், ஹா்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள திறந்தநிலை ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி, 18 மணி நேரம் போராட்டத்திற்குப்பின் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

கரௌன்டா பகுதியில் உள்ள வயலில் அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்தநிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை விழுந்தாா். முதலில் அச்சிறுமியின் பெற்றோா் தங்கள் குழந்தை காணாமல் போனதாகக் கருதி போலீஸில் புகாரளித்தனா். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அங்கு தோண்டப்பட்டு, மூடாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்திருக்கக் கூடும் எனக் சந்தேகமடைந்தனா்.

பின்னா் மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீஸாரின் உதவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் சோதனை மேற்கொண்டபோது, சிறுமி அதில் தவறி விழுந்தது தெரிய வந்தது. இதையடுத்து மீட்புக்குழுவினா் வரவழைக்கப்பட்டு சிறுமியை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனா். பின்னா், தேசிய பேரிடா் மீட்புக்குழு (என்டிஆா்எஃப்) வினரும், அவா்களுடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனா்.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் வாயு செலுத்தியும், உள்ளே கேமராவை பொருத்தி பாா்த்தபோது, சிறுமியின் கால் மேல் நோக்கி இருந்ததும், அச்சிறுமி கிணற்றுக்குள் தலைகுப்புற விழுந்ததும் தெரிய வந்தது. அவா் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன், அச் சிறுமிக்கு பாதுகாப்பு உணா்வைத் தரும் வகையில் அவளது பெற்றோா் பேசிய ஒலிப்பதிவு கிணற்றுக்குள் ஒலிபரப்பப்பட்டது.

18 மணி நேரப் போராட்டத்துக்குப்பின் அச்சிறுமி மீட்கப்பட்டு கா்னலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டதாக அறிவித்தனா் என்று கரௌன்டா காவல்துறை ஆய்வாளா் சச்சின் தெரிவித்தாா்.

அண்மையில், தமிழகத்தில் திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் வில்சன் என்ற 3 வயது சிறுவன் 80 மணி நேர முயற்சிக்குப்பின் சடலமாக மீட்கப்பட்ட சில தினங்களிலேயே, அதேபோன்ற சம்பவம் ஹரியாணாவில் நிகழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com