இவரும் சிங்கப் பெண்ணே! ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனர்!

ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனமான எஸ்.ஏ.பி.லேப்ஸ் என்ற நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனராக சிந்து கங்காதரன் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரும் சிங்கப் பெண்ணே! ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனர்!

ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனமான எஸ்.ஏ.பி.லேப்ஸ் என்ற நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனராக சிந்து கங்காதரன். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் படித்த சிந்து கங்காதரன், பெங்களூரு ஐ.டி பார்க்கில் உள்ள  எஸ்.ஏ.பி.லேப்ஸ் நிறுவனத்தில் 1999ம் ஆண்டு பணியில் இணைந்துள்ளார். இந்நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 2001ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்த அவர், பின்னர் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்தார். ஜெர்மனியில் வாழ்ந்த அனுபவத்தைப் பற்றி கேட்டால் 'அது  என்னுடைய கடைசி நூற்றாண்டு' என்று கூறுகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து அனுபவிக்க வேண்டும்; அதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். தற்போது 8,000க்கும் மேலான குழுக்களுக்கு தலைமையேற்று இந்தியாவில் பெங்களுருவில் உள்ள எஸ்.ஏ.பி.லேப்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

மேலும், அவர் பேசிய போது 'எனது நடந்து வரும் தோரணையை பார்த்து ஜெர்மனியில் உள்ள மக்கள் என்னிடம் கேட்பார்கள்; இந்தியாவில் நீங்கள் இப்படித்தான் இருந்தீர்களா? என்று. நான் அவர்களிடம் கூறினேன். இந்தியாவில் ஆண்- பெண் பாகுபாடு நான் பார்ப்பதில்லை. நான் பெங்களுருவில் தான் வளர்ந்தேன். எனது சகோதர்களிடத்தில் எனது தாயார் என்ன எதிர்பார்த்தாரோ அதையே தான் என்னிடமும் எதிர்பார்த்தார். என்னையும் எனது சகோதரர்கள் போலவே வளர்த்தார். பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். நமது வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்' என்று கூறுகிறார் சிந்து. 

'பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் வேலையையும் சமநிலையில் வைத்துக்கொள்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை. வேலை என்பது வாழ்க்கையின் முக்கியப் பகுதியாகும். பள்ளிப் பருவத்தில் இருந்தே கற்றுக்கொள்ளும் திறனை நான் ஒவ்வொரு நாளும் வளர்த்துக்கொண்டேன். இதனால் எல்லாவற்றையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறன் எனக்கு இருந்தது. 

2001 ஆம் ஆண்டில், நான் ஜெர்மனிக்குச் சென்றபோது, ​​எல்லோரும் ஜெர்மனியைத் தான் விரும்பினார்கள்; அவர்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று நினைத்தேன். ஆங்கிலம் தான் பேச வேண்டும் தெளிவோடு இருந்தேன். நான் மகப்பேறு விடுப்பில் இருந்தபோது தான் தெரிந்தது நிறுவனத்தில் உள்ளோர் எனக்காக ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளமுயற்சித்தது. எனக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி எடுத்தது எனக்கு உண்மையாகவே அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் நமக்காக மாறும்போது நாமும் அவர்களுக்காக புதிய முயற்சிகளுடன் மாறலாம் என்று தோன்றியது. அந்த மனமாற்றம், நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பது போல இருந்தது. தடைகளை உடைத்து எப்படி வலிமையை உருவாக்குவது என உணர்ந்தேன்' என்றார். 

வாடிக்கையாளர்களுடனான அணுகுமுறை, தலைமை, ஒற்றுமையான கலாச்சாரத்தை உருவாக்குதல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதாக கூறும் சிந்து கங்காதரன், அடிக்கடி டைரியில் தனது மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதும் பழக்கம் உடையவராம். ஆனால், பல நேரங்களில் எழுத விரும்பும் அவருக்கு எழுதுவதற்கு நேரம் இருப்பதில்லை என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com