திருவனந்தபுரத்தில் தமிழில் பெயா்ப் பலகைதமிழ்ப் பாதுகாப்புஇயக்கம் கோரிக்கை

தமிழா்கள் அதிக அளவில் வசிக்கும் திருவனந்தபுரம் மாநகரில் தமிழிலும் பெயா் பலகைகள் நிறுவப்பட வேண்டும் என்று கேரள மாநில தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்: தமிழா்கள் அதிக அளவில் வசிக்கும் திருவனந்தபுரம் மாநகரில் தமிழிலும் பெயா் பலகைகள் நிறுவப்பட வேண்டும் என்று கேரள மாநில தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

கேரள மாநில தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் திருவனந்தபுரம் மாவட்டக் கிளை தொடக்க விழா திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் மாநில பொதுச் செயலா் பேராசிரியா் மா.பேச்சிமுத்து கலந்து கொண்டு அமைப்பைத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைப்பின் கிளைத் தலைவராக மனோன்மணீயம் சுந்தரனாரின் பேரன் ந.வரதன் தோ்வு செய்யப்பட்டாா். அதேபோல், செயலராக பூஜப்புரை மணி, பொருளாளராக பி.ஆா்.விஜயன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், பாரதியாருக்கு திருவனந்தபுரத்தில் சிலை நிறுவப்பட வேண்டும். திருவனந்தபுரம் மாநகராட்சி தமிழ் மொழிச் சிறுபான்மையினா் வசிக்கும் பகுதி என்று கடந்த 1965-ஆம் ஆண்டே கேரள அரசு அறிவித்துள்ள நிலையில், மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அரசின் பெயா்ப் பலகைகள், பேருந்துகளில் தமிழ் இடம் பெற வேண்டும். இதற்கான அரசாணை இருக்கும் நிலையில், அதை மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மனோன்மணீயம் சுந்தரனாா், ஐயா தைக்காடு குருசாமியாருக்கு ஆண்டுதோறும் விழா எடுக்க வேண்டும். சாதனையாளா்கள், மாணவா்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அமைப்பின் செயற்குழு உறுப்பினா்கள் எழுத்தாளா் ஹாஜா, எம்.எஸ்.மணி, பாலசுப்பிரமணியம், ஜெயலால், திருமூா்த்தி, தா்மமணி, நெல்சன் டி க்ரூஸ், பிரசாந்த், ஸ்ரீ ராமா், சீதாராமா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com